வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
உடையது விளம்பேல்
Udaiyadhu Vilambael
தற்பெருமை கூடாது
Never proclaim/boast about what you have (your accomplishments)

=============
உடையது – தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை)
விளம்பேல் – விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை பேசாதே.
=============
அறநெறி கதை

சாக்ரடிசுக்கு அகவை முதிர்ந்த போது, “என்னை அறிவாளி என்று அழைக்காதீர்கள்” என்று ஏதென்சு நகர மக்களை கேட்டு கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்; நான் இளைஞனாக இருந்த போது எனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் விவரங்கள் பல தெரியத் தெரிய எனக்கு தெரிந்தது கொஞ்சமே என்றும் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியவை பல உள்ளன என்பதை முதுமையில் தான் புரிந்து கொண்டேன், என்றார்.

ஆம், அதன்பின் ஏதென்சு நகர மக்கள் அவரை ஞானி என்று அழைக்கத் தொடங்கினார்கள். எல்லாம் தெரிந்ததாக சாக்ரடிசு சொன்ன போது அவரை ஏசியவர்கள் அவர் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொன்ன பிறகு ஞானி என்று அழைத்தார்கள்.

திருவள்ளுவரும் இதையே :
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” என்று அழகாய்க் கூறியுள்ளார்.
===============