வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
இளமையில் கல்.
Ilamaiyil Kal
இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்று கொள்
Learn while you are young

இளம்பருவத்தில் கல்வி பயில்வதையே முதற்கடமையாக கொள்ளவேண்டும். வறுமை அல்லது செல்வாக்கு அல்லது மற்ற எக்காரணத்திற்காகவும் கல்வி பயில்வதில் கவனம் சிதறக்கூடாது. மேலும், கல்வியானது பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்ல – நல்வழியில் வாழ்வதற்கும் வழிகாட்டியாக விளங்கவேண்டும். அத்தகைய கல்வியை இளமையில் கற்பது தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.